10th Tamil Solutions Chapter 2 கேட்கிறதா என்குரல்!

10th Tamil Solutions Chapter 2 கேட்கிறதா என்குரல்!

கற்பவை கற்றபின்

Question 1.
காற்று பேசியதைப் போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுக.
Answer:
நான்தான் நிலம் :
நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும் வருந்தாமல் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை எண்ணி மிகுந்த வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன்.
 என்னைக் காப்பாற்றுங்கள் :
மனிதர்களே! நெகிழிப்பைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள். தொழிற்சாலைக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துங்கள். குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள். விவசாயத்திற்குத் தொழு உரங்களைப் பயன்படுத்துங்கள். இச்செயல்களைச் செய்தால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். நான் நலமாய் இருந்தால் மட்டுமே உங்களால் நலமாய் வாழ முடியும். மனிதர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

Question 2.
17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணங்களையும் தீர்வுகளையும் கலந்துரையாடுக.
Answer:
மதன் : வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்று உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணம் என்ன ?
சுதன் : ஆக்ராவில் தாஜ்மகாலைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலை மற்றும் எண்ணெய் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய தீங்கு விளைக்கும் நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து பரவுவதால் அவை வெள்ளைப் பளிங்குக் கற்களின் மீது பட்டு அவற்றின் நிறத்தையும் தன்மையையும் மாற்றுகிறது.
மதன் : இதற்கான தீர்வுதான் என்ன?
சுதன் : எல்.பி.ஜி. வாயு உருளைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பொருட்களை எரிக்கக் கூடாது என்று 1995 ஆம் ஆண்டில் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி தாஜ்மகாலைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகள் இன்று வரை இச்சட்டத்தை மதித்து வருகின்றன. ஆகவேதான் அவை மேலும் சேதமடையாமல் காக்கப்பட்டு வருகிறது.
 
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 : காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
 
Question 2.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
i) கொண்டல் – 1. மேற்கு
ii) கோடை – 2. தெற்கு
iii) வாடை – 3. கிழக்கு
iv) தென்றல் – 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 3, 1, 4, 2

குறுவினா
Question 1.
‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’
– இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
Answer:
உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!
தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!
 
சிறுவினா
Question 1.
உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்……… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால் ……….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
Answer:
நானே! நீர்
உலகில் முக்கால் பாகம் நான்
நான் இல்லை என்றால் உலகம் இல்லை
ஆதவனின் அணைப்பில் கருவுற்று
மேகமாய் வளர்ந்து
மழையாய் பிறப்பேன் நான்
விண்ணிலிருந்து நான் விழுந்தால்
என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
மலையில் விழுந்து
நதியில் ஓடி
கடலில் சங்கமிக்கும்
சரித்திர நாயகன் நான்.

Question 2.
சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.
Answer:
மின் விசிறிக் காற்று : நண்பா! வா எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வருகிறாய்? என்னைப் போல் நிலையாக ஓரிடத்திலிருந்து வீசக் கூடாதா.
சோலைக்காற்று : நீ ஓரிடத்தில் இருந்து நிலையாக வீசினாலும் உன்னை இயக்க ஒருவர் தேவை. அது மட்டுமல்லாமல் நீ கொடுக்கும் வெப்பக்காற்றை மனிதர்கள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர். மின்சாரம் தடைப் பட்டாலும் மனிதர்கள் உன்னை இயக்க முடியாது.
மின் விசிறிக் காற்று : மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா?
சோலைக்காற்று : ஆம், நான் மக்களுக்குக் குளிர்ந்த காற்றைக் கொடுக்கிறேன். என்னிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர். காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்திலும் தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. புதுப்பிக்கக் கூடிய வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மின் விசிறிக் காற்று : இத்தனை சிறப்புகள் கொண்ட உன்னை வைத்து ஒரு புது மொழியை உலகிற்குக் கூறப்போகிறேன்.
சோலைக்காற்று : அப்படியா! அப்புது மொழி யாது?
மின் விசிறிக் காற்று : “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்”.
 
நெடுவினா
Question 1.
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
– கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
Answer:
காற்றைப் பாராட்டல் :
மலர்ந்த மலராத பாதி மலரையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.
 
கவி நயம்:
கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவி நயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
சான்று:
மோனை : வளரும் வண்ணமே
எதுகை : நதியில் பொதிகை
முரண் : மலர்ந்தும் X மலராத
விடிந்தும் x விடியாத
இயைபு : வண்ணமே அன்னமே
அணி : பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமையணி வந்துள்ளது)
 
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழைப்பொழிவினைத் தருகிறது?
அ) ஐம்பது
ஆ) அறுபது
இ) எழுபது
ஈ) எண்ப து
Answer:
இ) எழுபது
Question 2.
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்?
அ) திருமந்திரம், திருவாசகம்
ஆ) திருக்குறள், திருமந்திரம்
இ) திருவருட்பா, திருப்பாவை
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
Answer:
ஈ) திருவெம்பாவை, திருப்பாவை
 
Question 3.
பொருத்துக.
1. மூச்சு – அ) நீர்
2. தாகம் – ஆ) நிலம்
3. உறைவது – இ) காற்று
4. ஒளி – ஈ) கதிரவன்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.இ 2.ஆ 3.அ 4.ஈ
இ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Question 4.
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
அ) திருமூலர்
ஆ) அகத்தியர்
இ) வள்ளுவர்
ஈ) தொல்காப்பியர்
Answer:
ஈ) தொல்காப்பியர்
 
Question 5.
“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
அ) திருமூலர்
ஆ) ஔவையார்
இ) தொல்காப்பியர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) ஒளவையார்
Question 6.
பொருத்துக.
1. மேற்கு – அ) வாடை
2. வடக்கு – ஆ) குடக்கு
3. தெற்கு – இ) குணக்கு
4. கிழக்கு – ஈ) தென்றல்
அ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
Answer:
ஆ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
 
Question 7.
“முந்நீர்” என்பதன் பொருள்
அ) கடல்
ஆ) கப்பல்
இ) பயணம்
ஈ) நீர்
Answer:
அ) கடல்
Question 8.
பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) வளி
ஆ) தென்றல்
இ) புயல்
ஈ) கடல்
Answer:
ஈ) கடல்
Question 9.
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
அ) தென்றல் விடு தூது
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) புறநானூறு
Answer:
ஆ) சிலப்பதிகாரம்
 
Question 10.
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
அ) இளங்கோவடிகள்
ஆ) ஔவையார்
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) திருமூலர்
Answer:
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
Question 11.
‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
அ) கரிகாலன்
ஆ) இராசராசன்
இ) இராசேந்திரன்
ஈ) பாழி
Answer:
அ) கரிகாலன்
Question 12.
கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய சங்ககாலப் பெண்புலவர்
அ) ஔவையார்
ஆ) ஆதிமந்தியார்
இ) அள்ளூர் நன்முல்லையார்
ஈ) வெண்ணிக் குயத்தியார்
Answer:
ஈ) வெண்ணிக் குயத்தியார்
 
Question 13.
முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி
அ) ஹிப்பாலஸ்
ஆ) யுவான்சுவாங்க்
இ) பிளைனி
ஈ) தாலமி
Answer:
அ) ஹிப்பாலஸ்
Question 14.
ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer:
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
Question 15.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் பருவக்காற்று
அ) வடகிழக்குப் பருவக் காற்று
ஆ) தென்மேற்குப் பருவக் காற்று
இ) வடமேற்குப் பருவக் காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக் காற்று
Answer:
அ) வடகிழக்குப் பருவக் காற்று
 
Question 16.
உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ள நாடு
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ஜப்பான்
Answer:
அ) இந்தியா
Question 17.
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
அ) குஜராத்
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரா
Answer:
இ) தமிழ்நாடு
Question 18.
உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாமிடம் பெற்றுள்ள நாடு
அ) சீனா
ஆ) அரேபியா
இ) இந்தியா
ஈ) ஜப்பான்
Answer:
இ) இந்தியா
 
Question 19.
இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணிகளில் ஐந்தாமிடம் பெறுவது
அ) காற்று மாசு
ஆ) நீர் மாசு
இ) நில மாசு
ஈ) ஒலி மாசு
Answer:
அ) காற்று மாசு
Question 20.
உலகக் காற்று நாள்
அ) ஜூன் 15
ஆ) ஜூலை 15
இ) ஜனவரி 15
ஈ) டிசம்பர் 10
Answer:
அ) ஜூன் 15
 
Question 21.
‘யுனிசெப்’ என்பது
அ) பருவநிலை மாறுபாடு
ஆ) சிறுவர் நிதியம்
இ) உலக சுகாதார நிறுவனம்
ஈ) உலக வங்கி நிறுவனம்
Answer:
ஆ) சிறுவர் நிதியம்
Question 22.
“பூங்காற்றே! இத்தனை நாள் உனைப் பாடாதிருந்துவிட்டேன்” என்று வருந்திய கவிஞர்
அ) தனிநாயக அடிகள்
ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி
இ) இளங்குமரனார்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) தேவகோட்டை வா.மூர்த்தி
Question 23.
உயிரின வாழ்வின் அடிப்படை
அ) இயற்கை
ஆ) செயற்கை
இ) மனிதன்
ஈ) மரங்கள்
Answer:
அ) இயற்கை
 
Question 24.
தொல்காப்பியர், உலகம் என்பது எதனால் ஆனது என்கிறார்?
அ) கடவுளால்
ஆ) மனிதனால்
இ) ஐம்பெரும் பூதங்களால்
ஈ) இன்பதுன்பங்களால்
Answer:
இ) ஐம்பெரும் பூதங்களால்
Question 25.
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?
அ) மாணிக்கவாசகர், திருவாசகம்
ஆ) திருமூலர், திருமந்திரம்
இ) திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ) ஔவையார், ஆத்திச்சூடி
Answer:
ஆ) திருமூலர், திருமந்திரம்
Question 26.
‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – என்று உரைத்தவர் யார்?
அ) ஔவையார்
ஆ) இளங்கோவடிகள்
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ) குமரகுருபரர்
Answer:
ஆ) இளங்கோவடிகள்
 
Question 27.
தென்றல் காற்று என அழைக்கப்படக் காரணம்
அ) மரம், செடி, கொடி, ஆறு, மலை தாண்டி வருவது
ஆ) வேகமாக வீசுவது
இ) சுழன்று வீசுவது
ஈ) மணற்பகுதியிலிருந்து வீசுவது
Answer:
அ) மரம், செடி, கொடி, ஆறு, மலை தாண்டி வருவது
Question 28.
‘நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ – என்று பெண்ணொருத்தி, தூது செல்ல காற்றினை அழைத்ததாகப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) இளங்கோவடிகள்
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ) குமரகுருபரர்
Answer:
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
Question 29.
“நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே” – என்ற பாடலை இயற்றியவர்
அ) வாலி
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மீரா
Answer:
ஆ) கண்ண தாசன்
 
Question 30.
நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” – என்று பழங்காலத்தில் கடல் கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) பரிபாடல்
ஈ) கலித்தொகை
Answer:
அ) புறநானூறு
Question 31.
ஹிப்பாலஸ் என்பவர்
அ) கிரேக்க மாலுமி
ஆ) போர்ச்சுக்கீசிய மாலுமி
இ) பிரெஞ்சு மருத்துவர்
ஈ) ஆங்கில ஆளுநர்
Answer:
அ) கிரேக்க மாலுமி
 
Question 32.
பருவக் காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்திற்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தவர்
அ) வாஸ்கோடகாமா
ஆ) ஹிப்பாலஸ்
இ) பார்த்தலோமியோ டயஸ்
ஈ) டெமாஸ்தனிஸ்
Answer:
ஆ) ஹிப்பாலஸ்
Question 33.
ஹிப்பாலஸ் பருவக்காற்று என்று பெயரிட்டவர்கள்
அ) யவனர்
ஆ) சீனர்
இ) ஆங்கிலேயர்
ஈ) அமெரிக்கர்
Answer:
அ) யவனர்
Question 34.
ஹிப்பாலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு
அ) கி.பி. முதல் நூற்றாண்டு
ஆ) கி.மு. முதல் நூற்றாண்டு
இ) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
ஈ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
Answer:
அ) கி.பி. முதல் நூற்றாண்டு
 
Question 35.
வெண்ணிக்குயத்தியார் என்பவர்
அ) சங்ககாலப் பெண் புலவர்
ஆ) காப்பிய நாயகி
இ) பாண்டிமாதேவி
ஈ) இடைக்காலப் பெண் புலவர்
Answer:
அ) சங்ககாலப் பெண் புலவர்
 
Question 36.
“களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்று பாடியவர்
அ) காக்கைப் பாடினியார்
ஆ) வெண்ணிக்குயத்தியார்
இ) வெள்ளிவீதியார்
ஈ) நப்பசலையார்
Answer:
ஆ) வெண்ணிக்குயத்தியார்
 
Question 37.
வெண்ணிக்குயத்தியார் கரிகால் வளவனைப் புகழ்ந்து பாடும் பாடலில் ‘வளி’ எனக் குறிப்பிடப்படுவது
அ) வலிமை
ஆ) காற்று
இ) விரைவு
ஈ) வறுமை
Answer:
ஆ) காற்று
Question 38.
பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்
அ) டெமாஸ்தனிஸ்
ஆ) ஹிப்பாலஸ்
இ) பெர்னாட்ஷா
ஈ) சாக்ரடீஸ்
Answer:
ஆ) ஹிப்பாலஸ்
 
Question 39.
ஹிப்பாலஸ் பருவக்காற்றின் பயனைக் கண்டறியும் முன்னரே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி கடல் வணிகத்தில் வெற்றி கண்டவர்கள்
அ) வட இந்தியர்கள்
ஆ) ஆப்பிரிக்கர்கள்
இ) தமிழர்கள்
ஈ) ஐரோப்பியர்கள்
Answer:
இ) தமிழர்கள்
Question 40.
இந்தியாவின் முதுகெலும்பு
அ) நெசவு
ஆ) வேளாண்மை
இ) கட்டிடத்தொழில்
ஈ) பேரளவு ஊற்பத்தி
Answer:
ஆ) வேளாண்மை
 
Question 41.
காற்று தாழ்வு மண்டலமாய்த் தவழ்ந்து புயலாய் மாறும் காலம்
அ) தென்மேற்குப் பருவக்காலம்
ஆ) தென்கிழக்குப் பருவக்காலம்
இ) வடமேற்குப் பருவக்காலம்
ஈ) வடகிழக்குப் பருவக்காலம்
Answer:
ஈ) வடகிழக்குப் பருவக்காலம்
Question 42.
‘வளிமிகின் வலி இல்லை ‘ என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
ஆ) ஆத்திச்சூடி, ஔவையார்
இ) கலித்தொகை, நல்லந்துவனார்
ஈ) புறநானூறு, இளநாகனார்
Answer:
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
Question 43.
கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறும் நூல் எது? கூறியவர் யார்?
அ) புறநானூறு, ஐயூர் முடவனார்
ஆ) ஆத்திச்சூடி, ஒளவையார்
இ) கலித்தொகை, நல்லந்துவனார்
ஈ) புறநானூறு, மதுரை இளநாகனார்
Answer:
ஈ) புறநானூறு, மதுரை இளநாகனார்
 
Question 44.
புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண்
அ) ஓசோன் படலம்
ஆ) எரிகற்கள்
இ) விடிவெள்ளி
ஈ) காடு
Answer:
அ) ஓசோன் படலம்
Question 45.
குளிர்பதனப்பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று
அ) கார்பன்-டை-ஆக்சைடு
ஆ) குளோரோ புளோரோ கார்பன்
இ) ஆக்சிஜன்
ஈ) ஹைட்ரோ கார்பன்
Answer:
ஆ) குளோரோ புளோரோ கார்பன
Question 46.
குளோரோ புளோரோ கார்பன் வாயிலாக உருவாகும் பாதிப்புகளைக் குறைக்கும் விதமாகப் பயன்படுத்தப்படும் குளிர்பதனி
அ) ஹைட்ரோ கார்பன்
ஆ) கார்பன் மோனாக்சைடு
இ) நைட்ரஜன்
ஈ) ஹைட்ரஜன்
Answer:
அ) ஹைட்ரோ கார்பன்
 
Question 47.
கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் பெய்வது
அ) அமில மழை
ஆ) கல் மழை
இ) கன மழை
ஈ) மிதமான மழை
Answer:
அ) அமில மழை
Question 48.
அமில மழையால் துன்பத்திற்கு உள்ளாகுபவை
i) மண்
ii) நீர்
iii) கட்டடங்கள்
iv) காடுகள்
v) நீர்வாழ் உயிரினங்கள்
அ) i, ii – சரி
ஆ) ili, iv – சரி
இ) iv, v – சரி
ஈ) ஐந்தும் சரி
Answer:
ஈ) ஐந்தும் சரி
Question 49.
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும்.
அ) ஓராயிரம்
ஆ) ஈராயிரம்
இ) ஒரு இலட்சம்
ஈ) ஒரு கோடி
Answer:
இ) ஒரு இலட்சம்
 
Question 50.
ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நாம் வெளியிடுவது
அ) ஆக்சிஜன்
ஆ) நைட்ரஜன்
இ) கார்பன்-டை-ஆக்சைடு
ஈ) ஹைட்ரஜன்
Answer:
இ) கார்பன்-டை-ஆக்சைடு
Question 51.
மரங்கள் நம் நுரையீரலுக்குத் தேவையான எதைத் தருகிறது?
அ) உயிர் வளி (ஆக்சிஜன்)
ஆ) கார்பன்-டை-ஆக்சைடு
இ) நைட்ரஜன்
ஈ) ஹைட்ரஜன்
Answer:
அ) உயிர் வளி (ஆக்சிஜன்)
Question 52.
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளவர் அ) மறைமலையடிகள்
ஆ) தனிநாயக அடிகள்
இ) ஞானியாரடிகள்
ஈ) அமுதன் அடிகள்
Answer:
ஆ) தனிநாயக அடிகள்
 
Question 53.
இயற்கையின் கூறுகளில் எதின் பங்கு கூடுதலானது?
அ) நிலத்தின்
ஆ) நீரின்
இ) நெருப்பின்
ஈ) காற்றின்
Answer:
ஈ) காற்றின்
Question 54.
கேட்கிறதா என் குரல் – என்னும் பாடப்பகுதி யாருடைய குரலாக எதிரொலிக்கிறது?
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) வானம்
Answer:
இ) காற்று
Question 55.
தாஜ்மகால் கட்டப்பட்ட நூற்றாண்டு அ) கி.பி. 16
ஆ) கி.பி. 17
இ) கி.பி. 15
ஈ) கி.பி. 18
Answer:
ஆ) கி.பி. 17
 
குறுவினா
Question 1.
மூச்சுப்பயிற்சி குறித்துத் திருமூலர் கூறிய செய்தி யாது?
Answer:
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.
Question 2.
காற்றைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி.
 
Question 3.
பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்ப காற்றிற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களைக் கூறு.
Answer:
தென்றல் காற்று, பூங்காற்று, கடல் காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல் காற்று, கீழ்க்காற்று, மென் காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல் காற்று, பேய்க்காற்று, சுழல் காற்று, சூறாவளிக்காற்று.
Question 4.
கிழக்குக் காற்று குறிப்பு வரைக. (அல்லது) கொண்டல் காற்று குறிப்பு வரைக.
Answer:
கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் காற்று.
மழையைத் தருவதால் மழைக்காற்று என்றும் அழைக்கப்படுகிறது.
Question 5.
மேற்குக் காற்று குறிப்பு வரைக. (அல்லது) குடக்குக் காற்று குறிப்பு வரைக.
Answer:
மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசும்.
வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசுவதால் வெப்பக்காற்று அல்லது கோடைக்காற்று என அழைக்கப்படுகிறது.
 
Question 6.
வாடைக்காற்று குறிப்பு வரைக.
Answer:
வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று.
பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப் படுகிறது.
Question 7.
தென்றல் காற்று குறிப்பு வரைக.
Answer:
தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் காற்று.
மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான காற்றைத் தருகிறது.
Question 8.
நாற்றிசையின் பெயர்களையும் அவற்றின் வேறு பெயர்களையும் எழுது. திசைகள்
Answer:
 
 
Question 9.
காற்று குறித்து சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய செய்தி யாது?
Answer:
தென்றல் காற்று பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வருகிறது; கூடவே வண்டுகளையும் அழைத்து வருகிறது என இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
Question 10.
இருவகைப் பருவக்காற்றுகள் யாவை?
Answer:
தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று.
Question 11.
தென்மேற்குப் பருவக்காற்று குறிப்பு வரைக.
Answer:
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்.
இவை மழைப்பொழிவினைத் தருகின்றன.
இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையினை இப்பருவக்காற்று மூலம் பெறுகிறோம்.
Question 12.
காற்று மாசடைவதினால் ஏற்படும் நோய்கள் யாவை?\
Answer:
கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய், மூளை வளர்ச்சிக் குறைவு.
 
Question 13.
ஓசோன் படலத்தின் பயன்களைக் கூறு.
Answer:
கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களைத் தடுக்கிறது.
புவியைப் போர்வை போலச் சுற்றி கதிரவனின் வெப்பத்தைக் குறைத்துக் கொடுக்கிறது.
Question 14.
ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?
Answer:
புறஊதாக் கதிர்கள் நேரடியாக உயிரினங்களைத் தாக்குவதால் மிகுந்த துன்பத்தை உயிரினங்கள் அடைகின்றன.
கண்களும் தோலும் பாதிப்படைகின்றன.
Question 15.
அமில மழை எவ்வாறு பெய்கிறது?
Answer:
காற்றில் கலந்துவிடும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து அமில மழையாகப் பெய்கிறது.
Question 16.
அமில மழையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?
Answer:
மண், நீர், கட்டடங்கள், காடுகள், நீர்வாழ் உயிரினங்கள் மிகுந்த துன்பத்திற்குள்ளாகின்றன.
 
Question 17.
குளோரோ புளோரோ கார்பன் குறிப்பு வரைக.
Answer:
* குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் நச்சுக்காற்று குளோரோ புளோரோ கார்பன் . • குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
Question 18.
காற்று மாசடைதலைத் தவிர்க்கும் வழிகளைக் கூறுக.
Answer:
மேம்பட்ட குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுதல்.
பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளித்தல்.
மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துதல்.
புதை வடிவ எரிபொருட்களைத் (கச்சா எண்ணெய், நிலக்கரி) தவிர்த்தல்.
சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்தாமை.
 
Question 19.
ஹிப்பாலஸ் பருவக்காற்றின் பயன்களைக் கூறு.
Answer:
புதிய கடல்வழி ஏற்படக் காரணமானது.
கிரேக்கம் – முசிறிக்கு விரைவான கடல் பயணம்.
யவனக் கடல் வணிகம் பெருகியது.
Question 20.
பருவக்காற்று எவ்வாறு உருவாகிறது?
Answer:
கதிரவனின் வெப்பத்தால் அடர்த்தி குறைந்து மேலே செல்லும் காற்றானது அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி பருவக்காற்றாகிறது.
Question 21.
காற்றாலையின் பயன்களைக் கூறு.
Answer:
மின்னாற்றலை உற்பத்தி செய்தல்.
நிலக்கரியின் தேவை குறைத்து கனிம வளம் பாதுகாக்கப்படல்.
Question 22.
காற்றின் ஆற்றல், வேகம் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?
Answer:
• காற்றின் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை (புறம் 51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்.
காற்றின் வேகத்தை, கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று மதுரை இளநாகனார் குறிப்பிட்டுள்ளார்.
 
Question 23.
இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் தென்றலை எவ்வாறு நயம்பட உரைக்கிறார்?
Answer:
தென்றலானது பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வருகிறது.
அவ்வாறு வரும்போது கூடவே வண்டுகளையும் அழைத்து வருகிறது.
சிறுவினா
Question 1.
ஹிப்பாலஸ் பருவக்காற்று குறிப்பு வரைக.
Answer:
கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்.
இவர் பருவக்காற்றின் உதவியால் முசிறித் துறைமுகத்திற்குப் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
விரைவான பயணத்திற்கு இப்புதிய வழி உதவியதால் யவனக் கப்பல்கள் சேரர்களின் முசிறித் துறைமுகத்திற்கு அதிகமாக வந்தன. (கிரேக்கரும் உரோமானியரும் யவனர் ஆவர்) ‘
யவனர் இப்பருவக்காற்றிற்கு அதைக் கண்டுபிடித்த ஹிப்பாலஸ் பெயரையே சூட்டினர்.
Question 2.
பருவக்காற்றின் வகைகளைக் கூறி விளக்குக.
Answer:
கதிரவனின் வெப்பத்தால் சூடாகி அடர்த்தி குறைந்து மேலே செல்லும் காற்று அங்குள்ள வெற்றிடத்தை நிரப்பி பருவக்காற்றாகிறது.
பருவக்காற்றின் வகைகள் : தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என இரு வகைப்படும்.
 
தென்மேற்குப் பருவக்காற்று :
ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும்.
இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தருகிறது.
வடக்கிழக்குப் பருவக்காற்று :
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும்.
இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை சிறக்கிறது.
நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற உதவுகிறது.
Question 3.
காற்றின் பயன்கள் யாவை?
Answer:
உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கிறது.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவை உற்பத்தி செய்ய உதவுகிறது.
விதைகளைப் பல இடங்களுக்குப் பரப்புகிறது.
உயிர்ச் சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது.
நவீன தொலைத்தொடர்பின் மையமாக விளங்குகிறது.
காற்றாலை மூலம் மின்னாற்றலைப் பெறுகிறோம்.
Question 4.
காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திகள் யாவை?
Answer:
தென்றலானது மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும் போது வண்டுகளையும் அழைத்து வருகிறது என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உரைத்துள்ளார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய பத்மகிரிநாதர் தென்றல் விடு தூதுவில் “தமிழும் குளிர்ச்சியான பொருநை நதியும் சேரும் செந்தமிழ் மலையின் பின் தோன்றிய தென்றலே” என்று பெண்ணொருத்தி தென்றலைத் தூது செல்வதற்காக அழைக்கிறாள்.
சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில் ‘வளி’ எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார்.
 
நெடுவினா
Question 1.
காற்று பேசியதைப் போல நிலம், நீர், வானம் பேசுவதாகவும் அவை இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்துவதாகவும் ஓர் உரையாடல் அமைக்க.
Answer:
நிலம் : என் உடலெல்லாம் காய்கிறது. என்னைக் குளிர்விக்கமாட்டாயா வானமே?
வானம் : இதற்கு நான் என்ன செய்ய முடியும்? உன்னில் வாழும் மனிதர்கள் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்களே! மரங்களை வெட்டுகிறார்களே தவிர, அவற்றை வளர்ப்பதற்குச் சிறிதும் சிந்திக்கிறார்களா என்பது ஐயமே.
நிலம் : ஆம் வானமே! வருடந்தோறும் மரம் நடுவிழாவைக்கூட நட்ட இடத்திலேயே நடத்துகிறார்கள். மரங்களை நட்டு அவற்றைப் பராமரிக்கும் பணியைச் செய்பவர்கள் குறைவே.
வானம் : அதுவும் சரிதான்!
நீர் : நண்பர்களே! என்னை நீங்களும் கண்டுகொள்ள மாட்டீர்களா? இந்த மனிதர்கள்
என்னை எப்படி அழுக்காக்கி உள்ளார்கள் பார்த்தீர்களா?
வானம் : ஐயகோ! உன்னை அடையாளம் காண்பதற்கே சிரமமாக இருக்கிறதே!
நீர் : ஆம் நண்பா !
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்ற உடற்றும் பசி
– என்னும் குறட்பா, வானமே நீ மழை பெய்யாமல் போனால் அடையும் இன்னல்களை அல்லவோ கூறுகிறது.
வானம் : ‘நீரின்றி அமையாது உலகு’ என்றும் திருக்குறள் கூறுகிறது
நிலம் : “மண்தினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித்தலை இய தீயுங்
தீமுரணிய நீரும், என்றாங்
கைம்பெரும் பூதத்தியற்கைப் போலப்” என்று நம்மைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சங்க இலக்கிய நூலான புறநானூற்றில்.
வானம் : “உலகமாவது நிலம் தீ நீர் விசும்பொடு வளி ஐந்தும் கலந்த மயக்கம்” என்கிறார் தொல்காப்பியர்.
நீர் : “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” என்று நாட்டிற்குத் தேவையான உறுப்புகளில் என்னையும் சேர்த்தே கூறியுள்ளார் திருவள்ளுவர்.
நிலம் : சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1986-ல் இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 
நீர் : ஆம் நண்பா! இயற்கை சார்ந்த அனைத்தும் குறிப்பாக நீ, நான், காற்று ஆகிய காரணிகளுடன் தொடர்புடைய அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும்.
வானம் : மிக்க மகிழ்ச்சி! மனிதர்கள் தங்கள் நடவடிக்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று நம்புவோமா!
நிலம், நீர் : உறுதியாக நண்பா !

Comments

Popular posts from this blog

10th Tamil புயலிலே ஒரு தோணி" கட்டுரை,

10th Maths Chapter 1 Relations And Functions Example 1.1 to Example 1.5